தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காலை உணவுத் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு

காலை உணவுத் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு

காலை உணவுத் திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு


ADDED : செப் 22, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, செப்.23–தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் 303 பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளில் படிக்கும் 30,056 மாணவர்களுக்கு நேற்று காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தை கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார்.

தேனி பிரசிடன்சி கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் பார்கவி தலைமை வகித்தார். மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கள், வெண்பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  ஊரக பகுதி பள்ளிகளுக்கு அதே பள்ளியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சமையல் செய்து வழங்கினர். நகர் பகுதியில் பொது சமையல் அறையில் உணவு தயார் செய்து பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை உணவாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் வழங்கப்பட்டது.

கலெக்டர் துவக்கி வைப்பு

காமராஜர் காலை உணவு திட்ட உத்தமபாளையம் அருகே உள்ள மேல சிந்தலச்சேரியில் நேற்று காலை கலெக்டர் வைத்திநாதன் துவக்கி வைத்தார். கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முன்னிலை வகித்தார். பின் கலெக்டர் கூறியதாவது: இந்த திட்டம் விரிவாக்கத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் 168 பள்ளிகளில் 13, 363 மாணவர்கள், பேரூராட்சி பகுதிகளில் 50 பள்ளிகளை சேர்ந்த 4636 பேர், நகராட்சிகளில் 85 பள்ளிகளை சேர்ந்த 12,057 பேர்கள் என மொத்தம் 303 பள்ளிகளில் 30,056 மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us