தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சர்வேயர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு

சர்வேயர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு

சர்வேயர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு


ADDED : செப் 22, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 05:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர், செப். 23

சின்னமனூர் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள இடத்தை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ உத்தரவின்பேரில், சின்னமனூர் டவுன் சர்வேயர் ஜெகன் குமார் 36 , அவரது உதவியாளர் ஜெயமணிமாறன் 35, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அளவிட சென்றனர். சர்வே பணிமுடித்து விட்டு, இருவரும் டூவீலரில் திரும்பிய போது, பின்னால் ஓடி வந்த அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், செல்வராஜ், சந்திரன் ஆகியோர் கம்புகளால் சர்வேயரையும், அவரது உதவியாளரையும் தாக்கினர். நிலை குலைந்த சர்வேயர் டூவீலரில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தவுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடி விட்டனர். தாக்கப்பட்ட இருவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us