UPDATED : செப் 23, 2026 05:06 PM
ADDED : செப் 23, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி என்.ஆர்.டி., நகர் மின்வாரிய அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின்வாரிய பணியாளர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணை தலைவர் சுப்புத்தாயி தலைமை வகித்தார். கிளை செயலாளர் மாரிச்சாமி முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்தவர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சி.ஐ.டி.யூ., கிளை செயலாளர் சண்முகம்,நிர்வாகிகள் துரைராஜ், சந்திரசேகரன், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
