UPDATED : செப் 23, 2026 05:42 PM
ADDED : செப் 23, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் எ.
புதுக்கோட்டை அருளானந்தபுரம் பிரபுதாஸ் பட்டுராஜன். முருகமலை பிரிவு அருகே மீன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் தேனி அரண்மனை புதூர் இளையராஜா 42, வேலை செய்கிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கணபதி 55, என்பவருடன் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இளையராஜாவை கணபதி கத்தியால் குத்தினார். தடுக்க வந்த பிரபுதாஸ்பட்டுராஜனையும் தாக்கினார். காயமடைந்த இளையராஜா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கணபதியை கைது செய்து வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
