UPDATED : செப் 23, 2026 05:38 PM
ADDED : செப் 23, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. ஹைமாஸ் விளக்கால் மதுரை - தேனி ரோடு, ஏத்தக்கோவில் ரோடு சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கும் வெளியூரில் இருந்து வந்து செல்லும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. கடந்த சில நாட்களாக ஹைமாஸ் விளக்கு எரியாததால் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் தாலுகா அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கும் எரியாததால் ஆண்டிபட்டி நுழைவுப் பகுதியான இப் பகுதியும் இருளாக உள்ளது. ஹைமாஸ் விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
