UPDATED : அக் 24, 2026 03:18 AM
ADDED : அக் 23, 2026 09:57 PM

அ நிறம் | அளவு
தேனி: திட்டமிடாமல் கூட்டுறவுத்துறை மூலம் புதிய திட்டங்களை துவங்கி ஊழியர்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும், வாரந்தோறும் ஆய்வு பணி மேற்கொள்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் விஷ்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார், மாவட்ட தலைவர் தாஜூதீன், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
