ADDED : செப் 23, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
கூடலுார், செப்.
24-
கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., அமைப்பு, சித்தா மருத்துவ பிரிவு இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். கல்லுாரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் தமிழ்செல்வி வரவேற்றார். டெங்கு காய்ச்சல் பரவரை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி காமகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சிராஜுதீன் விளக்கினார். மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
