UPDATED : அக் 22, 2026 07:11 PM
ADDED : அக் 22, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் ராஜாங்கம் அரசு நினைவு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், நகராட்சி சார்பில் டெங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
நகராட்சி தலைவர் பத்மாவதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லோகந்துரை, சுகாதார ஆய்வாளர் அகமது கபீர், தலைமை ஆசிரியர் அல்லா பிச்சை ஆகியோர் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான ஆலோசனை வழங்கினர். ஒவ்வொரு மாணவர்களும் தங்களது வீட்டை சுற்றிலும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் வைத்திருந்தாலே நகராட்சி பகுதி முழுவதிலும் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
