/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பல் மருத்துவக் கல்லுாரி மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை
/
பல் மருத்துவக் கல்லுாரி மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை
பல் மருத்துவக் கல்லுாரி மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை
பல் மருத்துவக் கல்லுாரி மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 08, 2025 01:57 AM
தேனி: மதுரை பல்மருத்துவக்கல்லுாரி மாணவி பவிஷ்யா 20, தேனியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி என்.ஆர்.டி., நகர் பாரதி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பல் டாக்டர் செந்தில் செல்வன் 52. பெரியகுளம் தேனி மெயின் ரோட்டில் பல் மருத்துவனை நடத்தி வருகிறார். இவரது மகள் பவிஷ்யா 20, மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர், பெற்றோரிடம் படிப்பு மிக கடினமாக இருப்பதாக கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் கடந்த ஜூலை 7 ல் அதிகாலை 1:30 மணி வரை மகளுக்கு ஆறுதல் கூறி துாங்க வைத்தனர். இந்நிலையில் மாணவி பவிஷ்யா மருத்துவக்கல்லுாரி தேர்வுக்கு செல்ல இருந்த நிலையில் நேற்று அதிகாலை மாணவியின் தாய் அபிராமி, பாட்டி கதவை தட்டியும் திறக்கவில்லை. செந்தில்செல்வன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவிஷ்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடலை இறக்கி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி ஏற்கனவே இறந்தாக தெரிவித்தனர்.
தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர் வழக்குப்பதிந்து உடலை தேனி மருத்துவக்கல்லுாரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.