/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உழவர் சந்தையில் துணை இயக்குனர் ஆய்வு
/
உழவர் சந்தையில் துணை இயக்குனர் ஆய்வு
ADDED : செப் 21, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: மாவட்டத்தில் தேனி, கம்பம் உழவர் சந்தைகள் மட்டும் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. கம்பம் உழவர் சந்தையில் தினமும் 30 டன்காய்கறிகள் விற்பனையாகிறது.
சமீபமாக அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து நேற்று காலை வேளாண் வணிக துறை துணை இயக்குநர் மெர்சி உழவர் சந்தைக்கு திடீர் விசிட் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
விவசாயிகள் அதிகாரிகளிடமும் சரியாக நடந்து கொள்ள அறிவுறுத்திசென்றார்.