/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவி வராத விரக்தி: கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை
/
மனைவி வராத விரக்தி: கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை
மனைவி வராத விரக்தி: கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை
மனைவி வராத விரக்தி: கணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை
ADDED : செப் 27, 2025 04:41 AM
உத்தம பாளையம்: சேர்ந்து வாழ மனைவி வராத விரக்தியில் கணவர், தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
கோம்பை ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 38, இவருக்கும் கோம்பை துரைச்சாமிபுரத்தை சேர்த்த பாண்டீஸ்வரிக்கும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. சமீப காலமாக செல்வராஜ் மது பழக்கத்திற்கு ஆளாகினார். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் கேரளாவிற்கு சென்று விட்டார். கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை சேர்ந்து வாழ வருமாறு தனது தாய் மூலம் பல முறை கணவர் அழைத்தும் மனைவி வரவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த செல்வராஜ் நேற்று முன்தினம் கோம்பை புளியந்தோப்பில் தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கோம்பை போலீசார் விசாரிக்கின்றனர்.