ADDED : செப் 27, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராமர் 51. தனியார் வாகன டிரைவராக இருந்த இவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். செப்.17ல் இருந்து இவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஒட்டான்குளம் கண்மாய் கரையில் அழுகிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. கூடலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.