/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
/
கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
கொத்தமல்லி விளைச்சல் இருந்தும் விலை இன்றி விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 23, 2025 12:30 AM

போடி; போடி பகுதியில் 'கொத்தமல்லி' விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கொத்தமல்லி நடவு செய்த 50 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். மழை அதிகரித்து இருந்தால் அழுகி பாதிப்பு ஏற்படும். அதிக வெயில் தாக்கம் இருந்தால் வளர்ச்சி குன்றி கருகி விடும். தற்போது போடி பகுதியில் பெருமாள் கவுண்டன்பட்டி, அம்மாபட்டி, சிலமலை, சில்லமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதியில் பெய்த சாரல் மழையால் கொத்தமல்லி விளைச்சல் அதிகரித்து உள்ளது.
பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் விளைந்த கொத்தமல்லியை தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் தற்போது கிலோ ரூ.20க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். களை எடுப்பு, மருந்தடிப்பு, தொழிலாளர் சம்பளம் போக விலை கட்டுபடியாக வில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் சிலர் விளைந்த கொத்தமல்லியை அறுவடை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டு கொத்தமல்லி விளைச்சல், விலையும் அதிகரித்து இருந்தது சீசன் துவக்கத்தில் கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை இருந்தது.
இந்த ஆண்டு போதிய விளைச்சல் இருந்தும் விலை இல்லாமல் கிலோ ரூ.20 ஆக உள்ளது.
விலை குறைவால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது,' என்றனர்.