/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டு இணைப்பு வழங்கி பல மாதங்களாகியும் குடிநீர் சப்ளை இல்லை சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
/
வீட்டு இணைப்பு வழங்கி பல மாதங்களாகியும் குடிநீர் சப்ளை இல்லை சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
வீட்டு இணைப்பு வழங்கி பல மாதங்களாகியும் குடிநீர் சப்ளை இல்லை சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
வீட்டு இணைப்பு வழங்கி பல மாதங்களாகியும் குடிநீர் சப்ளை இல்லை சங்கரமூர்த்திபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு
ADDED : நவ 04, 2025 04:32 AM

தேவதானப்பட்டி:  குள்ளப்புரம் ஊராட்சி, சங்கரமூர்த்திபட்டியில் அடிப்படை வசதிகள்  இன்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகள் செய்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட  5வது வார்டு சங்கரமூர்த்திபட்டி. இக் கிராமத்தில்  கீழத்தெரு, நடுத்தெரு, கோயில் தெரு, வசந்தம் நகர், விநாயகர் கோயில் தெருக்களில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இப் பகுதியில் குடிநீர், சாக்கடை, ரோடு உட்பட அடிப்படை வசதிகள்
இல்லாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர். பொதுமக்கள் கூறிய தாவது:
முடங்கிய ஜல்ஜீவன் திட்டம் பாண்டீஸ்வரன்,  சங்கரமூர்த்திபட்டி: இப்பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் வினியோகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்கிட வில்லை.
சேடபட்டி, வடுகபட்டி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 17 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் மூன்று நாட் களுக்கு ஒரு முறை 5 ஆயிரம் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்கின்றனர்.
இதனால் செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு ஒரு கி.மீ., தூரமுள்ள முதலக்கம்பட்டிக்கு சென்று பொதுமக்கள்  குடிநீர் சுமந்து வரும் நிலை உள்ளது.
ரூ.24.80 லட்சம் செலவில் 'ஜல் ஜீவன்' திட்டத்தில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.  அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால்  குடிநீரை தொட்டியில் ஏற்றி குடிநீர் வழங்கவில்லை. குழாய் பதிக்க ரோட்டின் இரு புறமும் தோண்டிய பள்ளங்கள் அரைகுறையாக மூடப்பட்டதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அருகே பொதுக்கிணறு சுற்றுச்சுவர்   சேதமடைந்துள்ளது. திறந்த வெளி கிணற்றில் 5 ஆடுகள் தவறி விழுந்து காப்பாற்றியுள்ளோம். இதனைச் சுற்றி சிறுவர்கள்  விளையாடுகின்றனர்.
கிணற்றுக்குள் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் கிணற்றிற்கு சுற்றுச்சுவரை அமைக்க ஊராட்சி   நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த சமுதாய கூடம் போதுராமன், சங்கரமூர்த்திபட்டி: 2000ம் ஆண்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூட்டம் பரா மரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால்   சுப நிகழ்ச்சி களுக்கு, 10 கி.மீ., தூரமுள்ள ஆண்டிபட்டிக்கு செல்ல வேண்டியுள்ளது.  சேதமடைந்த சமுதாய கூடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டி தர வேண்டும்.
மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரிப்பின்றி உள்ளதால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.சங்கரமூர்த்திபட்டியிலிருந்து முதலக்கம்பட்டிக்கு செல்லும் இணைப்பு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
தெருக்களில் சிமென்ட் ரோடுகள் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ரேஷன் கடை இல்லை பாண்டியன், சங்கரமூர்த்திபட்டி: சங்கரமூர்த்திபட்டியில் ரேஷன் கடை இல்லை.  நீண்ட துாரம் நடந்து முதலக்கம்பட்டி இந்திரா காலனி ரேஷன் கடைகக்கு சென்று வரும் நிலை உள்ளது.
முதியோர் சிரமம் அடைகினறனர். சாக்கடை வசதி இல்லாததால் மழை காலங்களில் கழிவுநீர் வெளியேறி, சுகாதாரக்கேடு ஏற்பட்டுள் ளது.
இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர   பலமுறை கிராம சபை கூட்டத்தில்  கோரிக்கை வைத்துள்ளோம். எந்த நடவடிக்கை இல்லை.
விநாயகர் கோயில் தெரு அருகே பல நாட்களாக சாக்கடை சுத்தம் செய்யவில்லை.
இதனால் கொசு தொல்லை தாங்க முடியவில்லை.
கிராமத்தின் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

