/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஸ்ரீராகவேந்திரர் கோயில் முன் ரோடு பணியை தவிர்த்த பேரூராட்சி நிர்வாகம்
/
ஸ்ரீராகவேந்திரர் கோயில் முன் ரோடு பணியை தவிர்த்த பேரூராட்சி நிர்வாகம்
ஸ்ரீராகவேந்திரர் கோயில் முன் ரோடு பணியை தவிர்த்த பேரூராட்சி நிர்வாகம்
ஸ்ரீராகவேந்திரர் கோயில் முன் ரோடு பணியை தவிர்த்த பேரூராட்சி நிர்வாகம்
ADDED : நவ 04, 2025 04:31 AM
சின்னமனுார்:  மார்க்கையன் கோட்டையில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலிற்கு முன்பு மட்டும் தார் ரோடு அமைக்காமல் பேரூராட்சி நிர்வாகம் புறக்கணித்துள்ளது. இந்த செயலால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.
மாவட்டத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் கடந்தாண்டு மார்க்கையன் கோட்டை அக்ராஹரத்தில் 'ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் '  கும்பாபிஷேகம் நடந்தது. கர்நாடகா மந்த்ராலயத்தில் இருந்து தலைமை ஆச்சார்யார் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட ஆச்சார்யர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.
இங்கு ராகவேந்திர சுவாமிகள், ராமர், சீதை   எழுந்தருளியுள்ளன. தினமும் காலை மாலையில் பூஜைகள் நடைபெறுகிறது.  ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோயில் அமைந்திருக்கும் அக்ராஹரத்தில் சில வாரங்களுக்கு முன் தார்ரோடு  அமைக்கும் பணிகள் நடந்தது. தரமில்லாத பணியால் பல இடங்களில் இப்போதே தார் பெயர்ந்துள்ளது.
ரோடு பணிமேற்கொண்ட போது, ராகவேந்திரர் கோயில் முன்பு மட்டும் ரோடு அமைக்காமல் விட்டு சென்றுள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'அக்ராஹாத்தில் தார் ரோடு தரமில்லாமல் அமைத்தால் ரோடு போட்ட மறுநாளே பல இடங்களில் பெயர்ந்துவிட்டது.
ராகவேந்திரர் கோயிலிற்கு முன்புறம் மட்டும் ரோடு அமைக்க மாட்டோம் என கூறி சென்றுள்ளனர்.
இதனால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் இதில் தலையிட்டு கோயிலிற்கு முன்பு தார் ரோடு அமைக்க நடவடிககை எடுக்க வேண்டும்,' என்றனர்.

