/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழை இல்லாததால் குறையுது வைகை அணை நீர்மட்டம்
/
மழை இல்லாததால் குறையுது வைகை அணை நீர்மட்டம்
ADDED : நவ 04, 2025 01:52 AM
ஆண்டிபட்டி:  தேனி மாவட்டம் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர் வரத்து குறைந்து வருகிறது. தொடர்ந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும்.  சில வாரங்களில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து, அக்., 27ல் நீர்மட்டம் 70.24 அடியானது. அணையின் மொத்த உயரம் 71 அடி.
இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக மற்றும் 58 ம் கால்வாய் வழியாகவும் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு நீர்மட்டம் 68.41 அடியாக இருந்தது.
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வருஷநாடு மூல வைகை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு மூலமும் வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் தற்போது வைகை அணைக்கு வினாடிக்கு 1825 கன அடி வந்து சேர்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 3499 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர் வரத்தை
விட நீர் வெளியேற்றம் அதிகம் இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

