/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சி பகுதிகள் விபரம்
/
நகராட்சிகளுடன் இணையும் ஊராட்சி பகுதிகள் விபரம்
ADDED : ஜன 02, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் உள்ள தேனி- அல்லிநகரம், பெரியகுளம் நகராட்சிகளுடன் தலா இரு ஊராட்சிகளில் குறிப்பட்ட பகுதிகள் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேனி-அல்லிநகரம் நகராட்சியுடன் பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி, தேனி ஒன்றியத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் உள்ள பகுதிகள் இணைக்கப்படுகிறது. அதே போல் பெரியகுளம் நகராட்சியுடன் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சி, எண்டபுளி ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதி நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது.

