/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன்கடை பணிக்கு தேர்வானவர்கள் விபரம் 5 மாதங்களாக நிறுத்தி வைப்பு
/
ரேஷன்கடை பணிக்கு தேர்வானவர்கள் விபரம் 5 மாதங்களாக நிறுத்தி வைப்பு
ரேஷன்கடை பணிக்கு தேர்வானவர்கள் விபரம் 5 மாதங்களாக நிறுத்தி வைப்பு
ரேஷன்கடை பணிக்கு தேர்வானவர்கள் விபரம் 5 மாதங்களாக நிறுத்தி வைப்பு
ADDED : மே 18, 2025 04:40 AM
தேனி: தமிழகத்தில் ரேஷன்கடை விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு 2024 நவம்பர், டிசம்பரில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு ஐந்து மாதங்களாகியும் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ரேஷன் கடைகளில் காலியாக இருந்த சுமார் 3400 விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு 2024 அக்டோபரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு இன்றி 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
விற்பனையாளர் பணிக்கு ரூ.150, கட்டுநர் பணிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. இப்பணிக்கு 96ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு 2024 நவம்பர், டிசம்பரில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வானவர்களுக்கு கடிதம், அலைபேசி குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 5 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்கள் எப்போது முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கின்றனர்.