/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேகரமாகும் பூக்களை மறுசுழற்சி செய்து ஊதுபத்தி உற்பத்தி திட்டம் தேவசம்போர்டு - தனியார் நிறுவனம் பேச்சு
/
சேகரமாகும் பூக்களை மறுசுழற்சி செய்து ஊதுபத்தி உற்பத்தி திட்டம் தேவசம்போர்டு - தனியார் நிறுவனம் பேச்சு
சேகரமாகும் பூக்களை மறுசுழற்சி செய்து ஊதுபத்தி உற்பத்தி திட்டம் தேவசம்போர்டு - தனியார் நிறுவனம் பேச்சு
சேகரமாகும் பூக்களை மறுசுழற்சி செய்து ஊதுபத்தி உற்பத்தி திட்டம் தேவசம்போர்டு - தனியார் நிறுவனம் பேச்சு
ADDED : டிச 02, 2024 04:22 AM
கம்பம்: சபரிமலையில் தினமும் சேகரமாகும் ஆயிரக்கணக்கான கிலோ பூக்களை மறு சுழற்சி முறையில் ஊதுபத்திகளாக மாற்றும் திட்டத்தை தயாரித்துள்ள தேவசம் போர்டு இதற்காக தனியார் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் முக்கியமானதாகும். இங்கு கடந்தாண்டு 52 லட்சம் பக்தர்கள் மகரவிளக்கு, மண்டல பூஜை உற்ஸவ காலங்களில் தரிசனம் செய்தனர் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
இந்தாண்டும் கோயில் நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. பக்தர்களின் வசதிக்காக தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் அதிகளவு பூக்களை ஐயப்பனுக்கு படைக்க எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான கிலோ பூக்கள் சேகரமாகின்றன.
பூஜைக்கு பின் சேகரமாகும் பூக்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எரிக்கும் பணி நடக்கிறது. இப்பணியில் சிரமம் உள்ளதால் சேகரமாகும் பூக்களை மறு சுழற்சி மூலம் வேறு ஏதாவது பயனுள்ள பொருட்ள்கள் தயாரிக்க வழி உள்ளதா என ஆய்வுகள் நடந்தன.
இதை அறிந்து சேகரமாகும் பூக்களை மறு சுழற்சி செய்து ஊது பத்திகளாக தயாரிக்க கான்பூர் நிறுவனம் ஒன்று கேரள அரசிடம் விண்ணப்பித்துள்ளது. கேரள அரசும், தேவசம் போர்டும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. நிலக்கல், சன்னிதானத்தில் இடம் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகளுக்கு வனத்துறை அனுமதியளிக்காது என்பதால் தற்காலிக 'செட்' அமைத்துக் கொள்ள அனுமதி வழங்க வாய்ப்புகள் உள்ளன. தற்காலிகமாக ஓராண்டிற்கு மட்டும் மறுசுழற்சி மையம் அமைத்து, சேகரமாகும் பூக்களில் இருந்து ஊது பத்திகள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவசம்போர்டும், தனியார் நிறுவனமும் பேசி வருகின்றன. விரைவில் இப்பணிகள் துவங்கவுள்ளன.