/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அகமலை மலை கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் முடக்கம்: ஊரக வளர்ச்சி, வனத்துறை மீது மக்கள் அதிருப்தி
/
அகமலை மலை கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் முடக்கம்: ஊரக வளர்ச்சி, வனத்துறை மீது மக்கள் அதிருப்தி
அகமலை மலை கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் முடக்கம்: ஊரக வளர்ச்சி, வனத்துறை மீது மக்கள் அதிருப்தி
அகமலை மலை கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் முடக்கம்: ஊரக வளர்ச்சி, வனத்துறை மீது மக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 22, 2025 04:25 AM

தேனி: போடி ஒன்றியம், அகமலை மலை கிராம ஊராட்சியில் மருத்துவம், குடிநீர், கல்வி, வேளாண் விளைப்பொருட்கள் சந்தைப்படுத்துதல், போக்குவரத்து, மின்சாரம், தொலை தொடர்பு சேவை ஆகிய அனைத்தும் 60 நாட்களாக முடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
அகமலை ஊராட்சி கடல் மட்டத்தில் இருந்து 3514 அடி உயரமும், 48 கி.மீ., சுற்றளவில் உள்ளது. ஊரடி, ஊத்துக்காடு, குரவன்குளி, அலங்காரம் 19க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. 1600 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் பெரியகுளம் சோத்துப் பாறையில் இருந்து அகமலை வரை 27 கி.மீ., துாரம் தார்ரோடு அமைக்கப்பட்டது. பருவ மழையால் 16 கி.மீ., ரோடு ஆங்காங்கே சேதமடைந்தது. மணல் மூடைகள், கற்களை வைத்து தற்காலிகமாக சீரமைத்ததால் மக்களின் சீரான போக்குவரத்து பயன்பட வில்லை. ரோடு வசதி இல்லாததால் மலை கிராம மக்கள் ம வேளாண் பயிர்களை சந்தைப்படுத்த பெரியகுளம் கொண்டு செல்வதில் சிரமம் தொடர்கிறது.
வனத்துறை மீது அதிருப்தி:
கண்ணக்கரை முதல் மருதையனுார் வரை உள்ள 9 கி.மீ., துாரம் ரோடு அமைக்க விவசாயிகள் 12 ஏக்கர் நிலம் ரூ.1 கோடி மதிப்பில் வாங்கி, கவர்னர் பெயரில் பதிவு செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் இதுவரை எந்த பணிகளும் துவங்கவில்லை. வனத்துறை மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். சோத்துப்பாறை முதல் ஊத்துக்காடு வரை ஜீப் பாதையில் கற்கள் பரப்பும் பணியும் 2 கி.மீ., துாரம் மட்டும் முடிந்து 5 கி.மீ., பணிமுடங்கியுள்ளன. அகமலை ஊராட்சி பகுதியில் குதிரைப் பாதைகள் 26 உள்ளன. அவைகள் புதர்மண்டியுள்ளன. அதனை சீரமைக்க கோரிக்கை வைத்தும் ஒன்றிய நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை.
குடிநீர் இல்லை
ஊராட்சியில் 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்ஒயர்கள் தரையை ஒட்டி தாழ்வாக செல்வதால் மின் சப்ளை தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. அகமலை ஊராட்சியில் முகப்புப் பகுதியில் ரூ.30 லட்சம் செலவில் பி.எஸ்.என்.எல்., டவர் அமைத்தனர். அது ஓராண்டு ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மும்முனை மின் இணைப்பு இருந்தால் மட்டுமே பி.எஸ்.என்.எல்., டவர் பயன்பாட்டிற்கு வரும் என பொறியாளர்கள் தெரிவித்ததால் தொலை தொடர்பு சேவை, இன்டர்நெட் சேவை பெற முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகமலை ஊராட்சி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆசிரியர்கள் வரததால் மூடிய பள்ளி
பாக்ஸ் மேட்டர்:
சின்னு, ஊத்துக்காடு: அகமலை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் 60 நாட்களாக முடங்கியுள்ளன. ஊரடி, ஊத்துக்காடு, அகமலையில் பள்ளிகள் இருந்தன. அவை மூடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் இன்றி ஊராட்சியில் உள்ள 40 மாணவ, மாணவிகள் வெளியூரில் வாடகை வீடுகளில் தங்கி படிக்கின்றனர். இது கூடுதல் சுமையாகிறது. இதனால் ஒரு பள்ளியாவது துவக்கவும் முடங்கியுள்ள குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.