/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் சக பயணியை தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை தேவிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : நவ 01, 2024 07:25 AM
மூணாறு: தனியார் பஸ்சில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சக பயணியை தாக்கியவருக்கு ஆறு மாதம் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தேவிகுளம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடிமாலி அருகே சாற்றுபாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்குஞ்சப்பன் 55. இவர் 2014ல் மாங்குளம், அடிமாலி இடையே சென்ற தனியார் பஸ்சில் முனிபாறை பகுதியில் இருக்கை தொடர்பாக சக பயணியிடம் தகராறு செய்து, தாக்கினார். அதில் பயணி, பலத்த காயம் அடைந்தார். இந்த வழக்கு தேவிகுளம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி ராஜன்குஞ்சப்பனுக்கு ஆறு மாதங்கள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி அருண் மைக்கிள் தீர்ப்பளித்தார்.