/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி பரமசிவன் கோயிலில் ஏப். 4ல் கும்பாபிேஷகம் புனித நீர் எடுத்து சென்ற பக்தர்கள்

ADDED : ஏப் 01, 2025 05:33 AM

போடி: தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் ஏப். 4 ல் நடைபெற உள்ளதால் நேற்று கோயிலுக்கு பக்தர்கள் புனித நீர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதன்பின் வரும் ஏப்.4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை, நன்கொடையாளர்கள் மூலம் கோயில் புரைமைப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதனையொட்டி நேற்று போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து காமராஜ் பஜார், கட்டபொம்மன் சிலை, முந்தல் ரோடு வழியாக போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டது.
கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை நடந்தது.
புனித நீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் நாராயணி முன்னிலை வகித்தனர்.
அன்னதான அறக்கட்டளை செயலாளர் பேச்சிமுத்து, அ.தி.மு.க., மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், நகராட்சி முன்னாள் துணை தலைவர் சேதுராம், தொழிலதிபர் பரமசிவம், போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.