sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சொர்க்கவாசலில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்

/

சொர்க்கவாசலில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்

சொர்க்கவாசலில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்

சொர்க்கவாசலில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்


ADDED : ஜன 11, 2025 08:04 AM

Google News

ADDED : ஜன 11, 2025 08:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்டு ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு கோலகலமாக நடந்தது. இதில் கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அல்லிநகரம் ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்ஸவத்தில் முக்கிய நிகழ்வான நேற்று அதிகாலை பள்ளி எழுச்சி நடந்தது. திருப்பாவை சேவித்தல்,அதனைத்தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. வரதராஜ பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பரமபத வாசலில் ஏழுந்தருளினார். அல்லிநகரம் கிராம கமிட்டித் தலைவர் நாகராஜ், செயலாளர் தாமோதரன், நிர்வாகிகள் வீரமணி மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டன.

தேனி என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பெரியகுளம்ரோடு எம்பெருமாள் கோயில், வயல்பட்டி சீதா லட்சுமண ஹனுமந்தராய சுவாமி சமேத ராமச்சந்திர சுவாமி கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி உற்ஸவ பரமபத வாசல் திறப்பு விழா நடந்தது.

ஆண்டிபட்டி


ஜம்புலிப்புத்தூரில் 800 ஆண்டுகள் பழமையான கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. .சக்கரத்தாழ்வாருக்கு மோட்சம் கொடுத்த கதலி நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் முன்னிலையில் பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோயில் சொர்க்கவாசல் முன்பு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹரிஷ்குமார்,பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஓடைத்தெரு கம்மவார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பெருமாள் சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் பாலமுருகன், செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

பெரியகுளம்


வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் பெருமாளுக்கு பால்,தேன், பழங்கள், சந்தனம், இளநீர் பொருட்களால் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சேவித்து பூஜை நடந்தது. பரமபதவாசல் வழியாக சாமி வலம் வந்தார். வடகரை கோதண்டராமர் கோயிலில் ராமபிரான் காலை கருட வாகனத்திலும், மாலையில் அனுமன் வாகனத்தில் வீதி உலா வந்தார். மூலவர் ராமர்,சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

போடி

சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆனந்த சயன பெருமாள் அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.சிலமலையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.






      Dinamalar
      Follow us