/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருப்பசாமி கோயிலுக்கு சிறு பாலம் ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
/
கருப்பசாமி கோயிலுக்கு சிறு பாலம் ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
கருப்பசாமி கோயிலுக்கு சிறு பாலம் ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
கருப்பசாமி கோயிலுக்கு சிறு பாலம் ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
ADDED : ஆக 08, 2025 03:16 AM

போடி: போடி ஒன்றியம் கோடாங்கிபட்டி குருவன்குளம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி, ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்ல சிறு பாலம், ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குருவன்குளம் கண்மாய் அருகே கருப்பசாமி, ஆதி பராசக்தி கோயில் அமைந்து உள்ளது, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, ஆடி வெள்ளியில் இப்பகுதி மக்கள் கோயிலுக்கு செல்வது வழக்கம்.
கண்மாய் அருகே உள்ள கோயில்களுக்கு செல்லும் பாதையை பக்தர்கள் மட்டும் இன்றி விவசாயிகளும் பயன்படுத்தி வந்தனர். ரோடு, சிறு பாலம் வசதி இல்லாததால் கோயிலுக்கு நடந்து செல்ல பக்தர்கள் மட்டும் இன்றி தோட்ட பகுதிகளுக்கு செல்லும் விவசாயிகளும் சிரமப்படுகின்றனர்.
பக்தர்கள், விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் சிறு பாலம், ரோடு வசதி அமைத்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.