/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் சுணக்கம் ராஜகோபுரம் பணி முடித்து கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
/
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் சுணக்கம் ராஜகோபுரம் பணி முடித்து கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் சுணக்கம் ராஜகோபுரம் பணி முடித்து கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் சுணக்கம் ராஜகோபுரம் பணி முடித்து கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2025 03:50 AM

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருப்பணியில் ராஜகோபுரம் திருப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் கோயில் விமானம் திருப்பணி முடிந்தும் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பணிகளை விரைவுபடுத்தி நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் நூற்றாண்டு பழமையானது.
இக் கோயில் நகரின் மையப்பகுதியில் உள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
செவ்வாய், வெள்ளி கூட்டம் அதிகமாக இருக்கும். பழமையான இக் கோயில் திருப்பணிகள் செய்து கும்பாபிேஷகம் நடத்தும் வகையில் பாலாலய பூஜை கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது.
திருப்பணியில் மூலவர் அம்மன் சன்னதி விமானம் அமைப்பதற்கு உபயதாரர்கள் முன் வந்து துவக்கினர்.
இதனை தொடர்ந்து உபயதாரர்கள் பங்களிப்புடன் கொடிமரம் புதுப்பித்தல், கோயில் சுற்றுப்பகுதி தூண்கள், மேற்புறம் புதுப்பிக்கும் பணி, காளியம்மன் கோயில், நவக்கிரகம், கோயில் முன்பு கம்பம் நடும் மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற வில்லை. திருப்பணிகளுக்காக ராஜகோபுரம் மூடி வைக்கப்பட்டுள்ளது.
ராஜகோபுரம் திருப்பணிக்காக ஹிந்து அறநிலைய துறை ரூ.2.20கோடி ஒதுக்கீடு செய்தாலும் இன்னும் நிதி வந்து சேரவில்லை.
இந்த நிதியும் ராஜகோபுரம் பணிக்கு போதுமானதாக இருக்காது. நிதி பிரச்னையால் திருப்பணிகளில் சுணக்கம் உள்ளது. பக்தர்கள் கூறியதாவது:
எப்போது கும்பாபிஷேகம் ஆனந்தி, பெரியகுளம்: கோயிலில் திருப்பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. மன அமைதிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனிப்பெருந்திருவிழா நாட்களில் கோயில் விமானம் கோபுரம் துணியால் மூடப்பட்டதால் வருத்தமாக உள்ளது.
ராஜகோபுரம் கட்டுமானப் பணியை விரைவில் துவங்கி, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுப்புறம்தூய்மை இல்லை மகேஸ்வரி, பெரியகுளம்: கோயில் உட்பிரகாரத்தில் கழிவறை குழாய் உடைந்து நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.
தூய்மை இல்லாததால் இலைக்கழிவுகள், குப்பை அகற்றப்படாமல் உள்ளது. உட்பிரகாரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
கோயிலைச் சுற்றி பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்களுக்காக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
விரைவில் பணி துவங்கும் சுந்தரி, செயல் அலுவலர்: கோயிலில் ராஜகோபுரம் உட்பட பணிகள் மேற்கொள்ள ஹிந்து அறநிலையத்துறை ரூ.2.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்களிப்புடன் ராஜகோபுரம் உட்பட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.