/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புல்மேடு வழியாக சபரிமலை செல்ல பக்தர்கள் ஆர்வம் - பாண்டித்தாவளத்தில் காவல் உதவி மையம் அமைப்பு

ADDED : நவ 22, 2024 02:20 AM

கூடலுார்:சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாண்டித்தாவளத்தில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு, குட்டிக்காணம், முண்டக்கயம், எரிமேலி வழியாக பம்பை வரை 129 கி.மீ., தூரம் வாகனத்திலும், அங்கிருந்து 6 கி.மீ., தூரம் மலைப்பாதையிலும் நடந்து சென்றால் சன்னிதானத்தை அடையலாம்.
அதே வேளையில் குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு வழியாக சத்திரம் வரை 21 கி.மீ., தூரம் ஜீப்பில் சென்று அங்கிருந்து 12 கி.மீ., தூரம் காட்டுப் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடைந்து விடலாம். இவ்வழியாக செல்பவர்கள் சன்னிதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்காமல் நேராக 18யை அடையலாம். இதனால் தற்போது சத்திரம், புல்மேடு காட்டுப் பாதையை பக்தர்கள் அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
முதல் நாளில் 412 பக்தர்கள் இப்பாதையில் நடந்து சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சத்திரத்திலிருந்து காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனம் முடிந்து திரும்புவதற்கு காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு. அதற்கேற்ப பக்தர்கள் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டுப் பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு உதவுவதற்காக பாண்டித்தாவளத்தில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.