/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புரட்டாசி சனிவாரத்தில் பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்; கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் முழங்கி பரவசம்
/
புரட்டாசி சனிவாரத்தில் பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்; கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் முழங்கி பரவசம்
புரட்டாசி சனிவாரத்தில் பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்; கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் முழங்கி பரவசம்
புரட்டாசி சனிவாரத்தில் பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்; கோவிந்தா.. கோவிந்தா.. கோஷம் முழங்கி பரவசம்
ADDED : செப் 22, 2024 03:59 AM

கம்பம்: புரட்டாசி முதல் சனி வாரத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுத்தருளினார். பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இம் மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தர்களின் அதிகளில் வந்து தரிசனம் செய்தவார்கள். கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் மூலவர் மலை உச்சியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
பிரசித்தி பெற்ற இக் கோயிலில் நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
கேரளா ராமக்கல் மெட்டு வழியாக பக்தர்கள் நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலை உச்சி மீது கோயில் அமைந்துள்ளதால் பல ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மலையடிவாரம் வரை இயக்கப்பட்டது.
சின்னமனூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் நின்ற நிலையில் பெருமாளும், காலடியில் ஆஞ்சநேயரும் இருப்பது தனிச் சிறப்பாகும். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கம்பம் கம்பராயப் பெருமாள் , உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு அலங்காரத்தில் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முதல் வாரத்தை முன்னிட்டு சுப்ரபாதத்துடன் நட்சத்திரம் தீபம் ஏற்றி வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை துவங்கியது.
கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மூலவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருப்பதி வெங்கடாசலபதி, அலங்காரத்திலும், உற்ஸவர் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகுளம் தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் நெஞ்சில் ராமர், சீதை அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர் ராதை, துளசி அலங்காரத்தில் காட்சியளித்தனர். கூட்டு பிரார்த்தனை நடந்தது. தாமரைக்குளம் மலை மேல் வெங்கடாசலபதி கோயிலில்
உற்ஸவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் பிரசாதம் வழங்கப்பட்டது.
போடி:- சீனிவாசப் பெருமாள் கோயிலில், தங்க கவச அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து செய்திருந்தார்.
மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.