/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குலதெய்வ கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கோயில்களில் மகாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் பரவசம்
/
குலதெய்வ கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கோயில்களில் மகாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் பரவசம்
குலதெய்வ கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கோயில்களில் மகாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் பரவசம்
குலதெய்வ கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கோயில்களில் மகாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் பரவசம்
ADDED : மார் 09, 2024 09:10 AM

தேனி : மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 28 பகுதிகளில் உள்ள சிவன், குலதெய்வ கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உட்பட மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 28 கோயில்கள் பொது மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட சிவன், குலதெய்வங்களை தரிசனம் செய்தனர். வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலங்களில் நேற்று விடிய, விடிய ஐந்து கால பூஜைகள் நடந்தது. பல சிவாலயங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஒவ்வொரு கால பூஜையிலும் சாமி தரிசனம் செய்தனர். இதே போல் குல தெய்வ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மாவட்டம் முழுவதும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 13 இன்ஸ்பெக்டர்கள், 89 எஸ்.ஐ., எஸ்.ஐ.,க்கள் உட்பட 342 போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதில் உத்தமபாளையம் சப் டிவிஷன் பகுதியில்12 இடங்களில் குலதெய்வ கோயில் பூஜைகளில் அதிகளவில் 13,600 பேர் வருவர் என உத்தேசிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. அங்கு கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் மாசிமகா சிவராத்திரி முதல் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஐஸ்வர்ய அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
பிரதோஷ விழா:
பெரியகுளம்: - கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரி விழா,பிரதோஷ விழாவை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நள்ளிரவு வரை 4 கால பூஜை நடந்தது. ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவன், ஞானாம்பிகைக்கு பூஜை நடந்தது. மாலை, இரவு, நள்ளிரவு உட்பட நான்கு கால பூஜைகள் நடந்தது.
ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. அதிகார நாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், சந்தனம்,மஞ்சள், இளநீர், தேன் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது. சிவனுக்கு உத்திராட்சத்தால் அபிஷேகம் நடந்தது.
ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.

