/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புரட்டாசி இரண்டாம் சனி வாரம் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
/
புரட்டாசி இரண்டாம் சனி வாரம் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
புரட்டாசி இரண்டாம் சனி வாரம் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
புரட்டாசி இரண்டாம் சனி வாரம் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
ADDED : செப் 29, 2024 06:04 AM

பெரியகுளம் : நேற்று புரட்டாசி இரண்டாவது சனிவாரத்தையொட்டி பெருமாள் கோயில்கள் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை இரண்டாம் வாரத்தை முன்னிட்டு சுப்ரபாதத்துடன் வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை துவங்கியது. மூலவர் திருவேங்கடமுடையான் திருப்பதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் 'கோவிந்தா, கோவிந்தா' கோஷத்துடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உற்ஸவர் வரதராஜப் பெருமாள் அனுமந்த வாகனத்தில், ராமர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது.
தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்தார். வடகரை கோதண்ட ராமர் கோயிலில் ராமர்,சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
பெரியகுளம் பாம்ாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை மலர்கள் அலங்காரத்தில் காட்சியளித்தனர். கூட்டு பிரார்த்தனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோவிலில் உற்சவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணாப்பெருமாள் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் பிரசாதம் வழங்கப்பட்டது.
போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் முத்தங்கி அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜை, சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து செய்திருந்தார்.
போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.