/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கந்த சஷ்டி விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு முருகப் பெருமானுக்கு குடம், குடமாக பால் ஊற்றி பாலாபிஷேகம்
/
கந்த சஷ்டி விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு முருகப் பெருமானுக்கு குடம், குடமாக பால் ஊற்றி பாலாபிஷேகம்
கந்த சஷ்டி விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு முருகப் பெருமானுக்கு குடம், குடமாக பால் ஊற்றி பாலாபிஷேகம்
கந்த சஷ்டி விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு முருகப் பெருமானுக்கு குடம், குடமாக பால் ஊற்றி பாலாபிஷேகம்
ADDED : நவ 08, 2024 04:49 AM

கூடலுார்: கந்த சஷ்டி விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். முருகப்பெருமானுக்கு குடம், குடமாக பால் ஊற்றி பாலாபிேஷகம் நடந்தது.
கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் 27ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
ஆறாம் நாளான நேற்று காலையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து கோயிலில் இருந்து காமாட்சி அம்மன் கோயில் தெரு, மெயின் பஜார், நடுத்தெரு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தனர்.
சுந்தரவேலவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. துர்கை அம்மனுக்கு சக்தி அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலையில் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(நவ.8) சுந்தரவேலருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுதல், ஊஞ்சல் உற்ஸவம் நடைபெறுகிறது.
திருக்கல்யாண நிகழ்ச்சியை நெல்லை உமையொரு பாக ஆதினம் உமா மகேஸ்வர சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் நடத்துகின்றனர்.
ஆண்டிபட்டி:- டி.சுப்புலாபுரம் ஸ்ரீ கந்தநாதன், ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்குப்பின் விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பருப்பு நீர் வழங்கப்பட்டது.
இக்கோயில் கந்தசஷ்டி விழா நவம்பர் 2ல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் துவங்கியது.
சுவாமி ஊர்வலத்தை தொடர்ந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை துவக்கினர். தினமும் கோயிலில் கந்தசஷ்டி பாடி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
நேற்று காலை கோயிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள், பொதுமக்களுக்கு பருப்பு நீர் வழங்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை கந்தநாதன் திருக்கல்யாண நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சுவாமி ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இரவில் பக்தர்கள் விரதம் விடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை கந்தநாதன் கோயில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
கம்பம்: சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் சுருளி வேலப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
நேற்று காலை பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
கோயில் துவங்கி வேலப்பர் கோயில் வீதி, மெயின்ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, காந்திஜி வீதி வழியாக கோயிலை அடைந்தது.
அங்கு குடம் குடமாக பால் ஊற்றி முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. சக்தி பூஜை, மகா அபிஷேகங்கள் நடைபெற்றது.