/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்க்கரை நோயாளிகள் மன இறுக்கம் இன்றி இருப்பது நல்லது; டாக்டர் மணிகண்டன் ஆலோசனை
/
சர்க்கரை நோயாளிகள் மன இறுக்கம் இன்றி இருப்பது நல்லது; டாக்டர் மணிகண்டன் ஆலோசனை
சர்க்கரை நோயாளிகள் மன இறுக்கம் இன்றி இருப்பது நல்லது; டாக்டர் மணிகண்டன் ஆலோசனை
சர்க்கரை நோயாளிகள் மன இறுக்கம் இன்றி இருப்பது நல்லது; டாக்டர் மணிகண்டன் ஆலோசனை
ADDED : நவ 14, 2024 07:03 AM
சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்.. கட்டுக்குள் வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி லண்டனில் 8ஆண்டுகள் சர்க்கரை நோய் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் குறித்து சிறப்பு பட்டம் பெற்ற டாக்டர் எம். மணிகண்டன் கூறியதாவது:
உலக அளவில் 537 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030 க்குள் இது 643 மில்லியனாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நமது நாடு சாக்கரை நோய்க்கு தலைநகர் என்ற நிலையில் உள்ளது. இந்தியாவில் 100 மில்லியன் அளவிலும் 2045ல் 134 மில்லியனாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் சர்க்கரை நோயாளிகளில் 6 பேர்களில் ஓருவர் இந்தியாவை - சேர்ந்தவராக உள்ளார்.
முன்பு கடினமாக உழைப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வராது. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. கடுமையாக வேலை செய்பவர்களுக்கும் சர்க்கரை நோய் தாக்கம் உள்ளது. உடல் எடை அதிகரிப்பு, தவறான உணவு பழக்க வழக்கங்கள், போதிய தூக்கம் இன்மை, மது, புகை பழக்கங்கள் காரணங்களாகும். இவை பற்றி விழிப்புணர்வு இல்லாதது முக்கிய காரணமாகும். சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யாமல் இருப்பது, தவறான நம்பிக்கைகளும் காரணங்களாகும்.
இந்தாண்டு கருப்பொருளாக Breaking Barriers, Bridging gaps என்று அறிவித்துள்ளார்கள். சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரவும் அதற்கான தடைகளை களைய மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
சர்க்கரை நோயிலிருந்து குணமாக, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது, மன இறுக்கம் இல்லாமல் இருப்பது, நல்ல தூக்கம், உடற்பயிற்சி , மருந்து மாத்திரைகள் தினசரி எடுத்துக் கொள்வது, ரத்த பரிசோதனை செய்து கொள்வது, கண் மற்றும் சிறுநீரக பரிசோதனைகள் செய்து கொள்வது, குறிப்பாக மருத்துவர்களை வழக்கமாக ஆலோசனை செய்வதன் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க முடியும் என்றார்.
Dr. R.M. மணிகண்டன் MRCP (UK)
MR CP (Diabetes end Eudocrinology)
சர்க்கரை, தைராய்டு நோய் நிபுணர்
அப்போலோ மருத்துவமனை - மதுரை.--