/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'பாலிதீன்' பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
/
'பாலிதீன்' பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
'பாலிதீன்' பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
'பாலிதீன்' பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
ADDED : ஜூலை 21, 2025 02:20 AM
தேனி: மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு தாராளமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள், உணவுப் பாதுகாப்புத் துறையினர் தவித்து வருகின்றனர்.
தனிமனித அன்றாட வாழ்வில் பாலிதீன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. அதே சமயம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் உயிரினங்களுக்கு நஞ்சாக மாறிவருகின்றன.
ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பாலிதீன் பைகள், டம்ளர்கள், பார்சல் சீட்கள், தட்டுகள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகங்கள், உணவுப் பாதுகாப்புத் துறையினர் பாலிதீன் தொடர்பாக ஆய்வுகள் செய்து அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், மாவட்டத்தில் ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் என அனைத்து இடங்களிலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு தராளமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கோவையில் வெளி வந்த ஒரு ஆய்வில், 'குழந்தையின் நஞ்சுக்கொடியில் பிளாஸ்டிக் நுண்துகள் இருந்தது கண்டறிந்து உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி நடவடிக்கை எடுப்பது என்பது கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே உள்ளது. இதனால் நீர்நிலைகள், வனப்பகுதிகள், தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வருகின்றன. பாலிதீன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.