/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
/
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்
ADDED : அக் 19, 2024 04:39 AM
கம்பம் : மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் இணைப்பு பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஓராண்டிற்கும் மேலாக மீட்டர் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டி மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர் வழங்க இருப்பதால் பழைய மீட்டர்கள் வரவில்லை என்கின்றனர். ஸ்மார்ட் மீட்டரும் இல்லை, பழைய மீட்டரும் இல்லை என்கின்றனர். செப்., மாதம் தனியார் கடைகளில் மீட்டர் வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றனர்.
ஆனால் அதன் பின் அரசு அந்த அறிவிப்பை கிடப்பில் போடப்படுள்ளது. இதனால் புது வீடு கட்டுவோர் மன உளைச்சலில் உள்ளனர்.
கட்டுமான நிறுவனங்களும் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையும் உள்ளது. தனியாரிடம் வாங்கி கொள்ள மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக இன்னமும் அறிவிக்கவில்லை. விரைவில் தனியாரிடம் மீட்டர் வாங்கி கொள்ள அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
ஒவ்வொரு துணை மின்நிலைய கட்டுப்பாட்டிலும் நூற்றுக்கணக்கில் புதிய மின் இணைப்பு கோரி காத்திருக்கின்றனர்.