/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழுதாகும் மின் மோட்டார்களை சீரமைக்க முடியாமல் திணறல்: கோடையில் ஊராட்சிகளில் தண்ணீர் தேவை அதிகரிப்பு
/
பழுதாகும் மின் மோட்டார்களை சீரமைக்க முடியாமல் திணறல்: கோடையில் ஊராட்சிகளில் தண்ணீர் தேவை அதிகரிப்பு
பழுதாகும் மின் மோட்டார்களை சீரமைக்க முடியாமல் திணறல்: கோடையில் ஊராட்சிகளில் தண்ணீர் தேவை அதிகரிப்பு
பழுதாகும் மின் மோட்டார்களை சீரமைக்க முடியாமல் திணறல்: கோடையில் ஊராட்சிகளில் தண்ணீர் தேவை அதிகரிப்பு
ADDED : ஏப் 05, 2025 05:33 AM

ஆண்டிபட்டி: கோடை காலம் துவங்கியதால் ஊராட்சிகளில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. பொதுக்கிணறுகள், போர்களில் மின் மோட்டார்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் அடிக்கடி பழுதாகிறது. நிதி நெருக்கடியால் பழுதாகும் மின் மோட்டார்களை சரி செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள், கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்கு மூல வைகை ஆறு, வைகை அணை ஆகிய இடங்களில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் பொதுக்கிணறுகள், போர்வெல்களில் சுரக்கும் நீரை கூடுதல் தேவைக்கு பயன்படுத்துகின்றனர். பல ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மட்டுமே ஆதாரமாக உள்ளன. தற்போது கோடை துவங்கிய நிலையில் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்துமின் மோட்டார்கள் அதிக நேரம் இயக்கப்படுகின்றன. ஊராட்சிகளில் பம்ப் ஆப்பரேட்டர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் மின் மோட்டார்களை பொதுமக்களே தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. பழுதான மின் மோட்டார்களை கழற்றி சரி செய்ய கூடுதல் செலவாகிறது. ஊராட்சிகளில் நிதி நிலையை காரணம் காட்டி பழுதான மின் மோட்டார்களை சரி செய்ய தாமதம் ஆவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
மோட்டார் பராமரிப்புக்கு கூடுதல் நிதி தேவை
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: பல ஊராட்சிகளில் போதுமான நிதி ஆதாரம் இல்லை. ஊராட்சிகளின் பராமரிப்பு செலவுக்கான மாநில நிதி குழு மானியம் வழங்கும் நிதி பற்றாக்குறையாக உள்ளது.வரி வசூல் மூலம் கிடைக்கும் நிதியையும் பயன்படுத்த முடியவில்லை. விவசாயம், கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ள கிராம ஊராட்சிகளில் 24 மணி நேரமும் தண்ணீர் தேவைப்படுகிறது. பழுதான மின் மோட்டார்களை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டால் பொதுமக்கள் பிரச்னை செய்கின்றனர். ஒரே மின் மோட்டாருக்கு அடிக்கடி செலவிட இயலாது. கோடை காலம் முடியும் வரை மின் மோட்டார்களின் பராமரிப்பு செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசு முன் வர வேண்டும் என்றனர்.