/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ப்ளுடூத்' கருவி மூலம் மின் மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிரமம்: 'டிஜிட்டல் மீட்டர்' அமைப்பது முழுமையாகாததால் அவதி
/
'ப்ளுடூத்' கருவி மூலம் மின் மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிரமம்: 'டிஜிட்டல் மீட்டர்' அமைப்பது முழுமையாகாததால் அவதி
'ப்ளுடூத்' கருவி மூலம் மின் மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிரமம்: 'டிஜிட்டல் மீட்டர்' அமைப்பது முழுமையாகாததால் அவதி
'ப்ளுடூத்' கருவி மூலம் மின் மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிரமம்: 'டிஜிட்டல் மீட்டர்' அமைப்பது முழுமையாகாததால் அவதி
ADDED : அக் 25, 2024 05:41 AM
தேனி: மின் இணைப்புகளில் 'டிஜிட்டல் மீட்டர்' முழுமையாக பொருத்தாததால் 'ப்ளுடூத்' மூலம் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மின் கண்கீட்டாளர்கள் புலம்புகின்றனர்.
நாம் பயன்படுத்தும் மின்சாரம் கணக்கிடுவதற்கு 1984ல் (ஐ.எம்.எம்.,) எனும் இந்தியன் மெட்டல் மீட்டர் பயன்பாடு இருந்தது. 1990ல் தகரத்திலான மீட்டர் பயன்பாட்டிற்கு வந்தது. பின் 2016ல் 'ஸ்டேட்டிக்' மீட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மின் கணக்கீட்டை துல்லியமாக கண்டறியும் வகையில் தற்போது 'டிஜிட்டல்' மீட்டர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மாவட்டத்தில் டிஜிட்டல் மீட்டர் இன்னும் நுாறு சதவீதம் வழங்கவில்லை.
மின் இணைப்புகளில் உள்ள மீட்டர் ரீடிங்படி கணக்கீடு செய்து யூனிட் வாரியாக கட்டண விபரங்களை நுகர்வோர் அட்டைகளில் எழுதி செல்வார்கள். இப் பணி ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் 5 நிமிடத்தில் முடிந்து விடும்.
இந்நிலையில் தொழில் நுட்ப வளர்ச்சியால் மின் கணக்கீட்டை துல்லியமாக பதிவு செய்திடும் வகையில் தற்போது அலைபேசியில் 'ப்ளுடூத்' கருவியை இணைத்து கணக்கெடுக்கும் புதிய நடைமுறையை சமீபத்தில் மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. மின் மீட்டர் மீது ப்ளூடூத் கருவியை பொருத்தினால் இணைய வசதி மூலம் மின்சாரம் கணக்கீடு செய்து, மீட்டர் ரீடிங், அதற்கான தொகையினை மின்வாரிய போர்ட்டலில் பதிவேற்றம் செய்து விடும். இந்த நவீன தொழில்நுட்ப வசதி பணியளர்களுக்கு எளிது என்றாலும் 'ப்ளுடூத்' கருவியை முழுமையாக பயன்படுத்திட இயலவில்லை. இதற்கு காரணம் 2017 ம் ஆண்டுக்கு முன்பு வழங்கியுள்ள பழைய மின் மீட்டர்களில் ப்ளுடூத் கருவி செயல்படுவதில்லை. இதனால் பல மீட்டர்களில் கணக்கீடு செய்ய முடிவதில்லை, பல இடங்களில் நெட் வசதி கிடைப்பது இல்லை என மின் கணக்கீட்டாளர்கள் புகார் கூறுகின்றனர். இன்னும் 28 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் பழைய மின் மீட்டர்கள் உள்ளதாக வாரியம் தெரிவிக்கிறது.
இந்த குளறுபடியால் ஒவ்வொரு மின் இணைப்புக்கும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் செலவிட வேண்டியுள்ளது.
நேரம் அதிகரித்தால் பழயை முறைப்படி மின் கணக்கீடு செய்து அட்டையில் பதிவு செய்கிறனர். இப் பணியால் ஒவ்வொரு மீட்டருக்கு 15 முதல் 20 நிமிடம் செலவிட நேரிடுகிறது.
கணக்கீட்டாளர்கள் படும் அவஸ்தையினை பார்க்கும் மின் நுகர்வோர் தங்களுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரீடிங்கில் கழித்து கொள்கிறார்களா, அதனையும் சேர்த்து கணக்கீடு செய்கிறார்களா என குழம்புகின்றனர்.