/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்
/
போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்
போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்
போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்த முள் செடிகளால் சிரமம்
ADDED : அக் 08, 2024 04:31 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், மறவபட்டியில் இருந்து போடிதாசன்பட்டி செல்லும் ரோட்டின் இருபுறமும் சீமை கருவேல செடிகள் அதிகம் வளர்ந்துள்ளன.
ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தகோவில் செல்லும் டவுன் பஸ் மறவபட்டி, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி வழியாக ஏத்தகோவில் செல்கிறது.
விவசாயிகள் காலை, மாலையில் வாகனங்களில் இப்பகுதி வழியாக விளை பொருட்கள், பால் ஆகியவற்றை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.
இரவில் குறுகலான ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது முள் செடிகளால் பாதிப்பு ஏற்படுகிறது. டவுன் பஸ் களின் பக்கவாட்டிலும் முள் செடிகள் உரசி பாதிப்பு ஏற்படுகிறது. முள் செடிகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.