/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செறிவூட்டிய அரிசியில் தயாரித்த விதவிதமான சாதம் வழங்கல் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : செப் 30, 2024 05:09 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் செறிவூட்டிய ரேஷன் அரிசியால் தயார் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கல், தயிர், தக்காளி சாதம் தயாரித்து நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளுக்கு வழங்கினர்.
தேனியில் செறிவூட்டிய ரேஷன் அரிசியை பிளாஸ்டிக் அரிசி என கருதி அல்லிநகரம் பகுதியில் மூதாட்சி சரஸ்வதி உட்பட அப்பகுதி மக்கள் ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்தாமல் வைத்திருந்தனர்.
இதுகுறித்து தினமலர்நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
கலெக்டர் ஷஜீவனா உத்தரவில், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார்,கலெக்டர் அலுவலகத்தில் நடந்தவிவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயார் செய்யப்பட்ட சக்கரைப் பொங்கல், தயிர், தக்காளி சாதங்களை விவசாயிகளுக்கு வினியோகம் செய்து, செறிவூட்டப்பட்ட அரிசி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.