/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திண்டுக்கல் --- சபரிமலை அகல ரயில்பாதை சர்வே பணிக்கு ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு: தேனி எம்.பி., கோரிக்கைக்கு பலன்

ADDED : மே 16, 2025 04:16 AM

தேனி: தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான திண்டுக்கல் -சபரிமலை அகல ரயில்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின்படி தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள 2025 -2026ம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தென்மாவட்ட மக்கள் நீண்ட காலமாக திண்டுக்கல்- சபரிமலை ரயில்பாதை திட்டம் செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேனி எம்.பி., தங்தமிழ்செல்வன் இதுகுறித்து பலமுறை லோக்சபாவில் பேசினார். அதன் பயனாக தெற்கு ரயில்வே நிர்வாகம் 2025 -- 2026ம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட் அறிக்கையில் குமுளி முதல் சபரிமலை வரை உள்ள 106 கி.மீ., துாரத்திற்கான சர்வே பணி மேற்கொள்ள ரூ.16 லட்சமும், திண்டுக்கல் முதல் சபரிமலை வரை உள்ள 201 கி.மீ., துாரம் சர்வேப் பணிக்கு ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.
ரயில்வே அதிகாரி கூறுகையில், மதுரை கோட்ட ஆய்வு கூட்டத்தில் தேனி எம்.பி., தொடர்ந்து வலியுறுத்தினார். அதனால் ரயில்வே அமைச்சகத்தின் பரிந்துரையில் நிதி ஒதுக்கி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் ஆய்வு பணி துவங்கும்,' என்றார்..திண்டுக்கல் -- குமுளி அகலரயில்பாதை போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் கூறுகையில், 'முதலில் திண்டுக்கல் - லோயர்கேம்ப் பணிகள் துவங்கினால் குறைந்த பட்ஜெட்டில் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துவிடும். அகல ரயில்பாதை அமைந்தால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை செல்ல வழிபிறக்கும் என்றார்.