ADDED : ஆக 24, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கருப்பையா 65.
இவரது அண்ணன் மகன் சண்முகவேல், கருப்பையாவிற்கு உதவி செய்து வந்தார். கருப்பையா தேவதானப்பட்டி- வத்தலக்குண்டு ரோட்டில் ஓட்டலில் சாப்பிடுவதற்கு தவழ்ந்து சென்றார். அந்த வழியாக பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பஸ் கருப்பையா மீது மோதியது.
காயத்துடன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். சண்முகவேல் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய உத்தமபாளையத்தைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரனிடம் விசாரிக்கின்றனர்.