/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறனாளி பெண் மீது கார் மோதி பலி
/
மாற்றுத்திறனாளி பெண் மீது கார் மோதி பலி
ADDED : ஜன 03, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதி அம்மன் கோயில் தெரு பிச்சை மனைவி மாற்றுத்திறனாளி ராமாயி அம்மாள் 79. இரு கால்களும் செயலிழந்த நிலையில் எங்கு சென்றாலும் தவழ்ந்து செல்வார்.
இந்நிலையில் ராமாயி அம்மாள் இட்லி வாங்க புது பஸ்ஸ்டாண்ட்டிலிருந்து, வடக்கு பாரஸ்ட் ரோடு செல்லும் ரோட்டில் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கார் மோதி ராமாயி அம்மாள் படுகாயமடைந்தார்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வடகரை போலீசார் விபத்து ஏற்படுத்திய எண்டப்புளியைச் சேர்ந்த தமிழ்செல்வனை கைது செய்து விசாரிக்கின்றனர்.--

