/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சியில் பொங்கல் விழா அதிருப்தி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
/
தேனி நகராட்சியில் பொங்கல் விழா அதிருப்தி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
தேனி நகராட்சியில் பொங்கல் விழா அதிருப்தி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
தேனி நகராட்சியில் பொங்கல் விழா அதிருப்தி கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
ADDED : ஜன 13, 2024 11:33 PM
தேனி:தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடந்த பொங்கல்விழாவை தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
இந்நகராட்சியில் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் 22 வார்டுகளில் வெற்றி பெற்றன. நகராட்சி தலைவர்பதவி காங்.,க்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் தி.மு.க., கவுன்சிலர் பாலமுருகன் தனது மனைவி ரேணுப்பிரியாவை தி.மு.க., கவுன்சிலர்கள்ஆதரவில் தலைவராக்கினார். ஆதரவளித்த கவுன்சிலர்களுக்கு சில வாக்குறுதி அளித்திருந்தார்.
இதன்படி வாக்குறுதி நிறைவேற்றாததால் தி.மு.க., கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் நகராட்சி தலைவர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி கட்சி தலைமை, அமைச்சர்கள், கலெக்டர்ஆகியோருக்கு அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்கள் மனு அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பல கட்ட சமரச முயற்சி தோல்வி அடைந்தது. மூன்று நாட்களுக்கு முன் நகராட்சியில் சமாதான கூட்டம் நடக்க இருந்த நிலையில் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., சரவணக்குமார் வராததால் காத்திருந்த அதிருப்தி கவுன்சிலர்கள் விரக்தியில் வெளியேறினர்.
புறக்கணிப்பு: இந்நிலையில் கவுன்சிலர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி சமாதானப்படுத்தும் வகையில் நேற்று நகராட்சியில் நடந்த பொங்கல் விழாவிற்கும் கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,, நகராட்சி தலைவர் உள்பட 6 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அதிருப்தி கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
அவர்கள் டிச., 16ல் நடந்த நகராட்சி சிறப்பு கூட்டம், அறிவுசார் மைய திருப்பு விழா, பொங்கல் விழா ஆகியவற்றை தொடர்ந்து புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

