/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுபார் அமைக்க மக்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளாததால் அதிருப்தி தேனி நகராட்சி சடையால் நகர் குடியிருப்போர் குமுறல்
/
மதுபார் அமைக்க மக்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளாததால் அதிருப்தி தேனி நகராட்சி சடையால் நகர் குடியிருப்போர் குமுறல்
மதுபார் அமைக்க மக்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளாததால் அதிருப்தி தேனி நகராட்சி சடையால் நகர் குடியிருப்போர் குமுறல்
மதுபார் அமைக்க மக்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளாததால் அதிருப்தி தேனி நகராட்சி சடையால் நகர் குடியிருப்போர் குமுறல்
ADDED : அக் 02, 2024 07:16 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி 31வது வார்டில் மதுபார் அமைக்க பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்த ஆர்வம் காட்டுவதால் மக்கள் அதிருப்ததி அடைந்துள்ளனர்.
நகராட்சி 31வது வார்டில் சேதமடைந்த பேவர் பிளாக் கற்களால் போக்குவரத்தில் சிரமம், வீட்டுமனை காலியிடங்களில் புதர் மண்டியும், அங்கு மழை நீர் தேங்குவதால் உற்பத்தியாகும் கொசுக்களால் சுகாதாரக்கேடு, சடையால் கோயில் தெருவில் எதிரே அமைய உள்ள தனியார் மதுபாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது, சீரமைக்கப்படாத தண்ணீர் தொட்டி, தெற்கு பகுதி தெருக்களில் பாதாள சாக்கடை நீர் தேங்குவதால் ஏற்படும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு என பல்வேறு வசதி குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி திட்டச்சாலை சடையால் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சிரமப்படுகின்றனர். இவர்கள் தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:
இந்நகராட்சியின் 31வது வார்டில் திட்டச்சாலை அமைந்துள்ளது.
அதில் சடையால் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் 1 முதல் 7 தெருக்கள் திட்டச்சாலையில் வடக்கு, தெற்கு பகுதிகளில் உள்ளன. இதில் குறுக்குத்தெருக்களும் அடங்கும். இங்கு 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். நலச்சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் மதளைசுந்தரம், பொருளாளர் சிவகணேஷ், துணைத் தலைவர் சொக்கலிங்கம், உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், வீரக்குமார், ராஜேஷ்கண்ணன், ராஜேந்திரன், ரமேஷ், சூரியன், வாழகுருநாதன் ஆகியோர் கூறியதாவது:
தீராத பிரச்னை
இப்பகுதியில் சடையால் கோயில் செல்லும் ரோட்டில் எதிரே தனியார் மதுபான கூடம் அமைக்க்பபட உள்ளதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் , கலெக்டர், எஸ்.பி., டாஸ்மாக் மேலாளர் என அனைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அப்பகுதியில் தனியார் மதுபான பார் அமைந்தால் பெண்களுக்கு இடையூறு ஏற்படும். கோயில் உள்ள பகுதியில் பக்தர்கள் சென்று வர இடையூறு ஏற்படும்.
பயன்படாத தண்ணீர் தொட்டி
மொத்தம் உள்ள ஏழு தெருக்களில் சடையால் நகர் தெற்கு 2வது தெருவில் நீண்ட நாட்களாக தண்ணீர் தொட்டி பயன்படுத்த முடியாமல் பழுதடைந்துள்ளது.
தெற்கு சடையால் நகர் 3வது தெருவில் தார் ரோடு அமைக்காமல் போக்குவரத்திற்கு லாயககற்ற நிலையில் உள்ளது.
இதனால் இவ்வழியாக கோயிலுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். குடிநீர் ஒரு நாள் விட்டு ஒருநாள் கிடைத்து வந்தது. சமீப நாட்களாக தெற்கு பகுதி தெருக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது.
எனவே,குடிநீர் பகிர்மான குழாய்களை ஆய்வு செய்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
நாய்களால் தொல்லை
இரவில் சடையால் கோயில் திட்டச்சாலை பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நகராட்சி சுகாதாரத்துறையினர் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை மேன்ஹோல்ஸ் பல இடங்களில் உயரமாக உள்ளதால் டூவீலர்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. அதே போல் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து தெருவில் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
அதனை சீரமைக்க வேண்டும். தனியார் காலிமனையிடங்களில் புதர் மண்டியுள்ளது. இதனால் மழை நீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. மழைநீர் பல நாட்களாக தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.