/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு: 4 பேர் கைது
/
ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு: 4 பேர் கைது
ADDED : ஜன 09, 2025 05:41 AM
பெரியகுளம்: ஆட்டோவை நிறுத்துவதில் தொழில் போட்டி காரணமாக ஒருவருக்கொருவர் தாக்கி தகராறு செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தென்கரை கிருஷ்ணன் கோயில் தெரு பாலாஜி 20. இவரது நண்பர் ஆகாஷ் 30. இவர்களுக்கு சொந்தமான ஆட்டோ பெரியகுளம் அரசு மருத்துவமனை அருகே ஸ்டாண்டில் வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. பாலாஜி, ஆகாஷ் ஸ்டாண்டிற்கு வந்தனர். தென்கரை கோட்டை தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராகவன் 36. இவரது நண்பர் சுரேஷ் இருவரும், ஆட்டோ ஸ்டாண்டில் பதிவு செய்யாமல் ஏன் ஆட்டோ நிற்கிறது என கேட்டு தகராறு செய்தனர்.
இதில் சுரேஷ் கம்பியால் பாலாஜியை அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பாலாஜி அனுப்பி வைக்கப்பட்டார். தென்கரை போலீசார் ராகவன், சுரேஷை கைது செய்தனர்.
ராகவன் புகாரில்: ஆட்டோ ஸ்டாண்டில் செயலாளராக உள்ளேன். ஆகாஷ், அவரது நண்பர் செல்லப்பாண்டி முன் விரோதம் காரணமாக சின்ன கத்தியால் தன்னை கீறியதாக தெரிவித்தார். இவரது புகாரில் ஆகாஷ், செல்லப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.