ADDED : ஏப் 13, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : சண்முகசுந்தரபுரத்தில் காளியம்மன் கோயில் பொங்கல் விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை அக்கிராமத்தைச் சேர்ந்த நவீன் 25, தொகுத்து வழங்கினார்.
அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராஜபிரபு என்பவர் தனக்கு பிடித்த பாடலை நிகழ்ச்சியில் ஒலிபரப்ப வலியுறுத்தி உள்ளார். நிகழ்ச்சி நிறைவு பெற்றதால் பாடல்களை ஒலிபரப்ப முடியாது என்று கூறியதால், ராஜபிரபு தகராறு செய்து நவீனை கல்லால் தாக்கியதில் காயமடைந்தார். நவீன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜபிரபுவை தேடி வருகின்றனர்.