/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இறுதி ஊர்வலத்தில் ஆடியதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
/
இறுதி ஊர்வலத்தில் ஆடியதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
இறுதி ஊர்வலத்தில் ஆடியதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
இறுதி ஊர்வலத்தில் ஆடியதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 31, 2025 03:14 AM
தேவதானப்பட்டி : இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் ஆடியதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பு மோதலில் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தேவாதானப்பட்டி கெங்குவார்பட்டி பகவதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா 62, இறந்தார்.
இவரது உடலை சுடுகாட்டிற்கு தூக்கி செல்லும் போது, இவரது மகன்கள் ஹரீஸ், சரவணன், ஆனந்த் மற்றும் நண்பர்கள் குபேந்திரன், முத்துராஜ், செல்வராஜ் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் ஆடினர். துக்க நிகழ்வுக்கு வந்த முத்துக்குமார் இவர்களை தள்ளி ஆடும்படி கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரீஸ், சரவணன், ஆனந்த் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, முத்துக்குமார் மைத்துனர் அழகரை தாக்கினர்.
இதனை தொடர்ந்து இறுதி சடங்கு முடிந்த பிறகு ஹரீஸ் உட்பட 7 பேர் கத்தி, அரிவாள்,கம்புடன் தாக்கியதில் அழகர், முத்துக்குமார் மனைவி பாண்டியம்மாள் காயமடைந்தனர். பாண்டியம்மாள் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் ஹரீஸ் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஹரீஸ் தாயார் ராஜம்மாள் புகாரில், எனது கணவர் முத்தையா இறந்த ஊர்வலத்தை, முத்துக்குமார், அழகர் அவதூறான செயலில் ஈடுபட்டு, வீட்டில் முத்துக்குமார், அழகர், உறவினர்கள் பாண்டியம்மாள், பொன்னுச்சாமி ஆகியோர்
எனது மகன்கள் ஆனந்த், சரவணனை அடித்து கொலைமிரட்டல் விடுத்தனர் என தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் முத்துக்குமார், அழகர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-