/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
23 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியால் அதிருப்தி
/
23 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியால் அதிருப்தி
23 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியால் அதிருப்தி
23 ஆண்டுகளுக்கு முந்தைய வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியால் அதிருப்தி
ADDED : செப் 25, 2025 04:52 AM
தேனி : தேர்தல் சிறப்பு திருத்த பணிகளுக்காக கடந்த 23 ஆண்டுகளுக்கு முந்தைய 2002 வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி குறித்து பி.எல்.ஓ.,க்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறையினர், பி.எல்.ஓ.,க்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில் 2002ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விபரங்களையும், 2025ல் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலையும் சரிபார்க்க வேண்டும். இதில் இரண்டு பட்டியலில் உள்ள நபர்களை தனியாக பிரித்து பட்டியல் தயார் செய்ய அறிவுருத்தி உள்ளனர்.
இதுபற்றி தேர்தல் பணி அலுவலர்கள், பி.எல்.ஓ.,க்கள் கூறியதாவது: ஆண்டு தோறும் வாக்காளர்பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வீடு, வீடாக சென்று பட்டியல் சரிபார்க்கின்றோம்.
இப்பணிகளால் இறந்தவர்கள், முகவரி மாறிய வாக்காளர்கள் பற்றிய தகவல்கள் அப்டேட்' செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் 2002ம் ஆண்டு பட்டியலில் இருந்தவர்களை வீடுதோறும் சென்று மீண்டும் உறுதி செய்ய கூறுவதில் என்ன பயன் என தெரியவில்லை.
மேலும் 23 ஆண்டுகளுக்கு முன் இருந்த வார்டுகள், பாகம் ஆகியவை வார்டு மறுசீரமைப்பு பணிகளில் மாறி உள்ளது.
இதனால் பணியாளர்களுக்கு கூடுதல் அலைச்சல், நேர விரையம் தான் மிஞ்சும். இதற்குபதிலாக தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறார்களாக, இறந்தவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என சரிபார்த்து உறுதி செய்யலாம். களப்பணியாற்றும் ஊழியர்களின் நிலையை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.