/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்
/
ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்
ADDED : ஜன 18, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கூடலுாரில் திருஅருட்பிரகாச வள்ளலார் சத்ய தருமச்சாலை சார்பில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு பல மாதங்களாக உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் உழவர் திருநாளை முன்னிட்டு இவர்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தருமச்சாலை அமைப்பின் தலைவர் இளங்கோவன், செயலாளர் கோபால், பொருளாளர் பாண்டி, பொறுப்பாளர்கள் சரவணன், மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.