/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட தடகள வீரர்கள் தேர்வு செப்.,5ல் நடக்கிறது
/
மாவட்ட தடகள வீரர்கள் தேர்வு செப்.,5ல் நடக்கிறது
ADDED : ஆக 31, 2025 04:16 AM
தேனி: மாவட்ட தடகள அணிக்கான வீரர்கள் தேர்வு செப்.,5ல் கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
மாநில தடகள சங்கம் சார்பில் சென்னை மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள போட்டிகள் நடக்கிறது. இதில்தேனி மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு கூடலுாரில் நடக்கிறது. ூஇதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ட்ரையதலான், ஈட்டி எறிதல், 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 60 மீ., 600 மீ., ஓட்டம், தடைதாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பென்டத்லான், 18 வயதிற்குட்பட்ட பிரிவில் 100 மீ., 200 மீ., 400 மீ., ஆயிரம் மீ., ஒட்டம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் ஒட்டம், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான ஓட்டங்கள், மும்முறை தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல், உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க வீரர்கள் தேர்வு நடக்கிறது. பங்கேற்க விரும் விளையாட்டு வீரர்கள் உரிய சான்றிதழ்களுடன் செப்.,5ல் வீரர்கள் தேர்வு போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 90807 31639 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தடகள கழக செயலாளர் அஜய் கார்த்திக்ராஜா, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

