/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி: ஜூன் 6 ல் துவக்கம்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி: ஜூன் 6 ல் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2025 01:20 AM
தேனி: தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைபந்து சங்கத்தின் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான 3வது கூடைப் பந்து போட்டி நடக்க உள்ளது. ஜூன் 6ல் தேனியில் மாவட்ட விளையாட்டு மைதான உள்விளையாட்டு அரங்கத்தில் துவங்க உள்ளன.
இப்போட்டிகள் ஜூன் 8 வரை பகலிரவு போட்டிகளாக நடக்க உள்ளன. இதில் தேனி எல்.எஸ்., மில்ஸ் கூடைபந்து சங்க அணி, வடுகபட்டி டாக்டர் சி.எஸ்., அகாடமி அணி, கம்பம் வாலி அகாடமி அணி, சில்வர் ஜூப்ளி கூடைப்பந்து அணி, தேனி டவுன் டீம் அகாடமி அணி, போடி ஹூப் ஸ்டார் அகாடமி அணி, எல்.எஸ்., மில்ஸ் அஸ்வின் அகாடமி அணி, சில்வர் ஜூப்ளி கிரீன்ஸ் அணி, வடுகப்பட்டி கூடைபந்து அணி, பென்னி குவிக் கூடைப்பந்து அணி உட்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளனர். நாக் அவுட் மற்றும் லீக்'போட்டிகள் நடக்கும். ஜூன் 8 ல் இறுதிப் போட்டிகள் மாலை 4:00 மணிக்கு துவங்கும். அன்று மாலை 5:00 மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.
முதலிடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை, கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், மூன்று, நான்காமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
சிறந்த வீரருக்கு ரூ.2500 சிறப்பு பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளன என, எல்.எஸ்.,மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.