/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட செஸ் போட்டி வீரர்கள் அசத்தல்
/
மாவட்ட செஸ் போட்டி வீரர்கள் அசத்தல்
ADDED : ஜன 03, 2024 06:56 AM
தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
ஓய்வுபெற்ற வனசரகர் அமானுல்லா போட்டிகளை துவக்கி வைத்தார். அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். போட்டிகள் 9, 11 வயது மற்றும் பொதுப்பரிவுகளில் போட்டி நடந்தது.
ஒன்பது வயது பிரிவில் தியாஸ்ரீ, சித்தேஷ், தேகந் முதல் 3 இடங்களை பிடித்தனர். பதினொரு வயது பிரிவில் சாய்ரிஷி, ஹர்ஷித், பவுன்சங்கர் முதல் 3 இடங்களை பிடித்தனர். பொதுப்பிரிவில் சரவணன், வர்சினிப்பிரியா, முகமது பராஸ் முதல் 3 இடங்களை வென்றனர். இளம் செஸ் வீரர்களுக்கான பரிசை வீரர்கள் சர்வேஷ், யோகமித்ரன் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கட்டுமான சங்க தேனி மாவட்ட தலைவர் முருகேசன், டாக்டர்கள் முருகேசன், சரவணன், அரசு ஐ.டி.ஐ., சேகரன், மின்வாரிய இளநிலை பொறியாளர் ரோஜாராணி பரிசு வழங்கினர்.
போட்டி ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் அஜ்மல்கான் செய்திருந்தார்.